×

தியோதர் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டியில் இன்று இந்தியா பி - இந்தியா சி மோதல்

புதுடெல்லி: தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா ஏ, பி, சி என மொத்தம் 3 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதின. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா பி அணி தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று பைனலுக்கு முன்னேறியது. இந்தியா ஏ - இந்தியா சி அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் அரை இறுதியாக அமைந்தது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய ரகானே தலைமையிலான இந்தியா சி அணி 47 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன் எடுத்து வென்றது. ஷுப்மான் கில் 106, இஷான் கிஷண் 69, சூரியகுமார் யாதவ் 56* ரன் விளாசினர். இந்தியா சி அணி 4 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

2 லீக் ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவிய இந்தியா ஏ அணி பரிதாபமாக வெளியேறிய நிலையில், இந்தியா ஏ - இந்தியா சி அணிகள் இன்று பைனலில் மோதுகின்றன. இப்போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா பி: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மயாங்க் அகர்வால், ரித்துராஜ் கெயிக்வாட், பிரஷாந்த் சோப்ரா, ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரி, அங்குஷ் பெய்ன்ஸ் (விக்கெட் கீப்பர்), ரோகித் ராயுடு, கே.கவுதம், மயாங்க் மார்கண்டே, ஷாபாஸ் நதீம், தீபக் சாஹர், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனத்காட். இந்தியா சி: அஜிங்க்யா ரகானே (கேப்டன்), அபினவ் முகுந்த், ஷுப்மான் கில், ரவிகுமார் சமர்த், சுரேஷ் ரெய்னா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், பப்பு ரே, நவ்தீப் சாய்னி, ரஜ்னீஷ் குர்பானி, உமர் நசீர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : clash ,India-B ,India ,match , India-B-India clash, final match ,Theodore Trophy
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...